MIvsPBKS : அகமதாபாத் மோடி மைதானத்தில் நேற்று (ஜூன் 1) இரவு நடந்த குவாலிபயர் 2 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ். punjab kings set records in ipl by defeated mi
இதன்மூலம் 11 வருடங்களுக்கு பிறகு 2வது முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.
கடைசியாக கடந்த 2014ஆம் ஆண்டு ஜார்ஜ் பெய்லி தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்றைய போட்டியின் மூலம் பல்வேறு சாதனைகளை பஞ்சாப் கிங்ஸ் அணி படைத்துள்ளது.
ஐபிஎல் தொடர் வரலாற்றில் மூன்று வெவ்வேறு அணிகளை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் அய்யர் பெற்றுள்ளார்.
அவர் இதுவரை 2020ல் டெல்லி கேபிட்டல்ஸ், 2024 இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் தற்போது 2025 இல் பஞ்சாப் கிங்ஸ்.
பஞ்சாப் அணி 204 ரன்கள் வெற்றிகரமாக சேஸ் செய்ததன் மூலம் பிளே ஆஃப் மற்றும் நாக் அவுட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.
மும்பை அணி முதலில் 200+ ரன்கள் குவித்து இதுவரை தோற்றதில்லை என்ற நிலையில், அந்த அணியை முதன்முறையாக தோற்கடித்துள்ளது பஞ்சாப் கிங்ஸ்.
ஐபிஎல் தொடரில் ஒரு அணி அதிகபட்சமாக (8வது முறை) 200+ ரன்களை சேசிங் செய்தது இதுவே முதல்முறை.
மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் இது 9வது வெற்றிகரமான 200+ சேசிங். இது ஒரு சீசனில் நடந்த அதிகபட்ச சாதனையாகும்.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மும்பை அணி கண்ட 6வது தோல்வி இதுவாகும். கடைசியாக 2014ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸை வென்றிருந்தது.
