புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் துணை நிலை ஆளுநராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன் உரையுடன் நேற்று (ஆகஸ்ட் 1) தொடங்கியது.
இந்தநிலையில், நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி இன்று (ஆகஸ்ட் 2) ரூ.12,700 கோடிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்:
“மீன்பிடித்தடைக்கால நிவாரணம் ரூ.6,500-லிருந்து ரூ.8,000-ஆக உயர்த்தப்படும்.
மழைக்கால நிவாரணம் ரூ.3,000-லிருந்து ரூ.6,000-ஆக உயர்த்தப்படும்.
அரசு பள்ளியில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்த மாணவ, மாணவிகள் உயர்கல்வி படிக்க, மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த 500 பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும்.
இந்த ஆண்டு முதல் ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு மானிய விலையில், அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் சமையல் எண்ணெய் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Share Market : வார இறுதி நாளில் எந்த பங்கில் முதலீடு செய்யலாம்?
Comments are closed.