சென்னை வானிலை அறிவித்த அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே.
இந்த நிலையில் பிரபல தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவடங்களில் இன்று இரவு முதல் காலை வரை மழை உச்சகட்டமாக இருக்கும்.

நாளை காலை வடக்கு TN கடற்கரைக்கு மிக அருகில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இருக்கும். இன்றிரவு முதல் நாளை காலை வரை மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து சென்னை வரை மழைக்கான இடமாக இருக்கும்.
நாகை / திருவாரூர் இரவில் இருந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை குறையும், ஏனெனில் நாகை அட்சரேகைக்கு மேலே உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடியே சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் கனமழை பெய்து வரும் நிலையில் இரவில் அதிக மழை பெய்யும் என்பதால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
