சென்னையில் தாம்பரம் மற்றும் அரும்பாக்கம் பகுதிகளில் இன்று ஜூலை 7-ந் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை அமலில் இருக்கும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. Power
துணை மின் நிலையங்கள் பராமரிப்பு காரணமாக சென்னை அரும்பாக்கம் மற்றும் தாம்பரம் பகுதிகளில் இன்று மின் தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின் தடை அமலில் இருக்கும் பகுதிகள்
தாம்பரம்: மாடம்பாக்கம், சுதர்சன் நகர், அம்பிகா நகர், ஞானானந்த நகர், கணபதி நகர், ஜெயின் சுதர்சன், ரேணுகாம்பாள் நகர், ராகவேந்திரா நகர், கிருஷ்ணா நகர், அன்ஷா கார்டன்
அரும்பாக்கம்: ஜெய் நகர் 4 முதல் 7வது தெரு, பிரகதீஸ்வரர் நகர், துரைபிள்ளை தெரு, இந்திரா காந்தி தெரு, கவிதா தெரு, நேரு தெரு, நேரு நகர், வீனா கார்டன், விபி நகர், நியூ தெரு.