‘ஆட்சியில் பங்கு’ என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது; இது எங்களுக்கும் தெரியும்; காங்கிரஸுக்கும் தெரியும் என்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் INDIA TODAY நடத்தும் கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
- திமுக- காங்கிரஸ் இணைந்துதான் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும்.
- ஆட்சியில் பங்கு என்ற பேச்சே தற்போது எழவில்லை.
- ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு பொருந்தாத கோரிக்கை. அது எங்களை விட அவர்களுக்கு நன்றாக தெரியும். நாங்கள் ஒற்றுமையாக இருப்பதை பிடிக்காதவர்கள் செய்யும் திட்டமிட்ட சதி தான் அந்த கோஷம்.
- சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெறும்
- திமுக கூட்டணியில் ஏதாவது முறிவு ஏற்படுமா? என சிலர் சதி செய்கின்றனர்; இந்த சதியை பற்றி நாங்களும் கவலைப்படவில்லை; அவர்களும் கவலைப்படவில்லை
- திமுக கூட்டணியில் முறிவு ஏற்பட வேண்டும் என்பதற்காக “ஆட்சியில் பங்கு” என சிலர் கிளப்பிவிடுகின்றனர்.
- திமுக- காங்கிரஸ் கூட்டணி நன்றாக இருக்கும்.
- அரசியலைத் தாண்டி என்னுடைய சகோதரர் போன்றவர் ராகுல் காந்தி.
- திராவிட மாடல் ஆட்சியின் வெற்றிப்பயணத்தில் தமிழ்நாடு வரலாறு காணாத வகையில் வெற்றிநடை போட்டுச் செல்கிறது. இந்த வெற்றிப்பயணம் திராவிட மாடல் 2.0 ஆட்சியிலும் தொடரும்.
- எப்போதும், என்றென்றும் மக்களுடன் இருக்கக்கூடிய இயக்கம் தி.மு.க. மக்களுக்காகப் பாடுபடக்கூடிய இயக்கம் தி.மு.க.
- 2021 சட்டமன்றத் தேர்தலைவிட 2026 தேர்தல் கடினமாக இருக்கும் என்கிற பேச்சு, எதிர்க்கட்சிகள் மக்களை குழப்புவதற்காக பேசுவது.
- 2021 தேர்தலை விட 2026 தேர்தலில் திமுக கூட்டணி அதிகமான இடங்களைப் பெறும்.
- எதையுமே எதிர்ப்பார்க்காமல் உழைத்தால்தான் அரசியலில் முன்னேற முடியும்; கலைஞரிடம் இருந்து உழைப்பை கற்றுக் கொண்டேன்.. அதையே என் மகனுக்கும் (உதயநிதி) கற்றுத் தருகிறேன்.
- திராவிட மாடல் அரசின் 5 ஆண்டுகால சாதனைகளை சொல்லி மக்களிடத்தில் நாங்கள் வாக்கு கேட்போம்.
- பா.ஜ.கவின் வெறுப்பு அரசியலுக்குத் துணையாக இருப்பது அடிமைகள் மற்றும் அவதூறுகள். இவற்றைப் பயன்படுத்தி ஜனநாயகத்தின் விழுமியங்களை அழிக்கப் பார்க்கிறார்கள்.
- தமிழ்நாட்டிற்கு நன்மை செய்வார்கள் என்றுதான் ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கப்படுகிறது. ஆனால், அவர்கள் ஒன்றிய பட்ஜெட்டில் கொடுத்தது ஜீரோதான். வரும் சட்டமன்றத் தேர்தலில் NDA கூட்டணிக்குத் தமிழ்நாட்டு மக்கள் திருப்பிக் கொடுக்கப் போவது ஜீரோதான்.
- இந்தியா டூடே கருத்து கணிப்பில் தி.மு.க கூட்டணி 40% ஆதரவுடன் முன்னிலையில் உள்ளது. தி.மு.க-விற்கும் அடுத்து இருக்க கூடிய கட்சிக்கும் வித்தியாசம் 12 சதவீதம். இது Simple Arithmetic தான். வெறும் 3 சதவீதம் இருந்தாலே Clean Sweep. 12 சதவீதம் என்றால் நிச்சயம் ‘THUMPING VICTORY’ தான்.
