“அரசியலில் சில பேர் அடித்தளமே இல்லாமல் உள்ளே வர முயற்சிக்கிறார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தால் அறிவுத் திருவிழா’வெல்லாம் நடத்த முடியாது. வேண்டுமென்றால் அடிமைத் திருவிழா’ என்று ஒரு நிகழ்ச்சி நடத்தலாம்” என்று துணை முதல்வரும் திமுகவின் துணைப் பொதுச்செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற அறிவுத் திருவிழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: இன்றைக்கு கொள்கையற்ற ஒரு கூட்டமும், தமிழர் விரோத பாசிச கும்பலும், தமிழ்நாட்டைக் குறி வைத்திருக்கிறார்கள். எனவே, இந்த அறிவுத்திருவிழாவை, ஒரு தலையாய கடமையாகக் கருதியே நாம் செய்து இருக்கிறோம்.
இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்க வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். புதிதாக சில பேர் கிளம்பி வரிசையாக வருகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு சாதாரண அரசியல் கட்சியாக, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாதிரி, பத்தோடு பதினொன்றாக இருந்திருந்தால், அதை யாரும் அழிக்க வேண்டும் என்று முயற்சி செய்யமாட்டார்கள். நாம் கொள்கைக் கூட்டம் என்று தெரிந்ததால்தான் அவர்கள் நம்மை அழிக்க வருகிறார்கள். குறிப்பாக, பாசிச சக்திகள் நம் கொள்கைக் கூட்டத்தின் மீது கை வைத்துப் பார்க்க முயற்சிக்கிறார்கள். இப்போது அரசியலில் சில பேர் அடித்தளமே இல்லாமல் உள்ளே வர முயற்சிக்கிறார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தால் அறிவுத் திருவிழா’வெல்லாம் நடத்த முடியாது. வேண்டுமென்றால் அடிமைத் திருவிழா’ என்று ஒரு நிகழ்ச்சி நடத்தலாம்.
இளைஞர் அணிச் செயலாளர் வருகிறார் என்பதால், கைத்தட்டி, கூடி கலைகிற கூட்டம், நம் கூட்டம் கிடையாது. இந்த இரண்டு நாள் நீங்கள் இங்கு அமர்ந்து இருக்கிறீர்கள் என்றால், யாரையோ பார்க்க வந்த கூட்டம் கிடையாது. நாம் ஒவ்வொருவரும் 44 பேர்களும் என்ன பேசுகிறார்கள் என்பதைக் கேட்க வந்த கொள்கைக் கூட்டம். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
உதயநிதி ஸ்டாலின் உரை:
