தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட 3 பேரை போலீசார் வலைவீசி தேடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தவெக தலைவர் நடிகர் விஜய்யின் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கரூர் போலீசார், கரூர் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தவெக சமூக ஊடகப் பொறுப்பாளர் நிர்மல் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் மற்றும் பலர் என போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, தவெகவின் சமூக ஊடகங்களை நிர்வகிக்கும் தி ரூட் நிறுவனத்தின் ஜெகதீஷ் மற்றும் பவுன்சர் நயீம் ஆகியோரை போலீஸ் தேடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த 3 பேரின் செல்போன்களும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் போலீசார் 3 பேரையும் வலைவீசி தேடுவதாக கூறப்படுகிறது.