நாடு முழுவதும் தீபாவளி இன்று (அக்டோபர் 20) கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் உள்ள மக்கள் சேர்ந்து விமரிசையாக கொண்டாடும் பண்டிகையாக தீபாவளி திருநாள் உள்ளது. அந்த வகையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் காலை முதலே களைகட்ட தொடங்கியுள்ளது.
நாட்டின் பல்வேறு நகரங்களில் மக்கள் பலரும் அதிகாலையிலேயே எழுந்து புத்தாடை உடுத்தி, கடவுளை வழிபட்டு தீபாவளி கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் புதுமண தம்பதிகள் தங்களது தல தீபாவளியை குடும்பத்தினருடன் பட்டாசு வெடித்து கொண்டாடி அதனை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”அனைத்து சக குடிமக்களுக்கும் இதயப்பூர்வமான தீபாவளி வாழ்த்துக்கள். இந்த புனிதமான தீபத் திருநாள் ஒவ்வொரு தனிநபரின் வாழ்க்கையையும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்லிணக்கத்தால் ஒளிரச் செய்யட்டும் – அதுவே எங்கள் உண்மையான விருப்பம்” எனத் தெரிவித்துள்ளார்.
