மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு பிரதமர் மோடி செல்ல இருப்பதாக தமிழக பாஜக மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ANI செய்தி நிறுவனத்துக்கு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டி: திருப்பரங்குன்றம் பிரச்சனையில் தமிழக அரசு இந்துக்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுகிறது. ஆனால் பிரதமர் மோடி, உணர்வுப்பூர்வமாக தார்மீக ஆதரவை அளித்து வருகிறார்.
பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வருகை தந்து முருகப்பெருமானை தரிசனம் செய்கிறார். முருகன் எங்களின் தமிழ் கடவுள்.
நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம். இது ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரும், நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி என்பது ஏறக்குறைய உறுதியானது. முதல்வர் ஸ்டாலினின் தவறான ஆட்சியால் மக்கள் மிகுந்த துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர், எனவே நிச்சயமாக தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 28-ந் தேதி தமிழகம் வருகை தர இருக்கிறார்; மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடக்க விழா, தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரசார கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்க இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
