ஒரு அரசியல் கட்சியையே ஒரு குடும்பம் நடத்தும்போது அது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று பிரதமர் மோடி தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
கேள்வி:
நீங்கள் எதிர்க்கட்சிகளின் வாரிசு அரசியல் பற்றி பேசுகிறீர்கள். இந்த குற்றச்சாட்டு மக்களிடம் எடுபடுமா? வாரிசு அரசியல் இந்தியா மட்டுமல்ல, தெற்கு ஆசியா முழுவதும் உள்ளது. இதனை மக்கள் பொருட்படுத்துகிறார்களா?
பதில்:
ஒரு குடும்பத்தில் இருந்து ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் அரசியலில் இருந்தால், நான் அதனை வாரிசு அரசியல் என ஒருபோதும் சொல்லவில்லை. அதிக அளவில் மக்கள் அரசியலுக்கு வரவேண்டும் என நான் விரும்புகிறேன்.
ஒரு குடும்பத்தில் இருந்து 10 பேர் கூட அரசியலுக்கு வந்தாலும் நான் அதை கெடுதல் என சொல்லவில்லை. ஆனால், ஒரு அரசியல் கட்சியையே ஒரு குடும்பம் நடத்தும்போது, அந்த குடும்பம் மட்டுமே எல்லா முடிவுகளையும் எடுக்கும்போது, கட்சியில் அடுத்த தலைமுறை அந்த குடும்பத்தில் இருந்தே வரும்போது, அது ஒரு குடும்ப அரசியல் கட்சி. இதில் ஜனநாயகம் இல்லை.
இதனால் அந்த கட்சியில் எத்தனை அறிவாளிகள், திறமையுள்ளவர்கள் இருந்தாலும் அவர்கள் மேலே வருவதில்லை. இது ஜனநாயகத்துக்கு எதிரானது. நாட்டின் முடிவு நாட்டின் இளைஞர்களால் எடுக்கப்படும். நாட்டின் கிராமங்களால், நாட்டின் விவசாயிகளால் எடுக்கப்படும். ஒவ்வொருவருக்கும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அது குடும்ப அரசியலில் நடப்பதில்லை.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தேர்தல் பத்திர ஊழல்? – மோடி பேட்டி!
ஹெல்த் டிப்ஸ்: ஆழ்ந்த உறக்கத்துக்கு இதை பின்பற்றினால் போதும்!