ADVERTISEMENT

ப்ளாஸ்டிக் ஸ்ட்ரா… ஜூஸ் கடைகளுக்கு எச்சரிக்கை!

Published On:

| By Kavi

ப்ளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்படுத்தினால் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.Plastic straws Warning to juice shops

ப்ளாஸ்டிக் ஸ்ட்ராவால் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுகின்றன. மக்கும் தன்மையற்றவை என்பதால் கடலில் கலக்கும் போது அது கடல்வாழ் உயிரினங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.

ADVERTISEMENT

எனினும் ஜூஸ் கடைகள், இளநீர் கடைகளில் ப்ளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் உணவங்கள்,ஜூஸ் கடைகள், இளநீர் கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை ஒன்றை இன்று (ஜூன் 18) விடுத்துள்ளது.

ADVERTISEMENT

அதில், “ஜூஸ் கடைகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களை உடனடியாக நிறுத்த வேண்டும். உணவு பாதுகாப்புத் துறை சட்டத்தின்படி, பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களைத் தொடர்ந்து பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேப்பர் ஸ்டிரா அல்லது சில்வர் ஸ்டிராக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.Plastic straws Warning to juice shops

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share