அரசுப் போக்குவரத்து கழகங்களில் 2023-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை ஓய்வு பெற்ற அனைவருக்கும் ஓய்வூதிய பலன்கள் கிடைக்க ரூ265.44 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு நேற்று ஆகஸ்ட் 18-ந் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் நேற்று ஆக.18-ந் தேதி மண்டல அலுவலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். 2 ஆண்டுகளில் பணி ஓய்வுபெற்ற 3,500 தொழிலாளர்களுக்கு ஓய்வுக்கால பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடைபெற்றது. சென்னையில் பல்லவன் இல்லம் முன்பு இந்த காத்திருப்புப் போராட்டத்தை சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் இந்த காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு நேற்று போக்குவரத்து கழகத்தில் 2023-25-ல் ஓய்வு பெற்ற அனைவருக்கும் வூதிய பலன்கள் கிடைக்க ரூ265.44 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசாணை விவரம்: