பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2-வில் நடிக்கும் பாவனி ரெட்டி?

Published On:

| By christopher

pavani reddy in pandiyan store season 2?

ரெட்டைவால் குருவி, சின்னதம்பி, போன்ற பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் பாவனி ரெட்டி. சீரியல்களில் நடிப்பதை தாண்டி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 5 சீசனில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு பரிச்சயமான முகமாக மாறினார்.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது சக போட்டியாளராக இருந்த நடனக் கலைஞர் அமீருடன் இவருக்கு காதல் ஏற்பட்டது. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் அமீரும் பாவனியும் விளம்பரங்கள், ஆல்பம் சாங் என இருவரும் இணைந்து நடிக்க தொடங்கினர்.

ADVERTISEMENT

அதன் பிறகு இயக்குனர் ஹச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான துணிவு படத்திலும் அமீரும் பாவனியும் இணைந்து நடித்திருந்தனர்.

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

ADVERTISEMENT

சீரியல்களை தாண்டி தமிழ், தெலுங்கு என பல படங்களில் பாவனி ரெட்டி ஏற்கனவே நடித்திருந்ததால், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் அதிக பட வாய்ப்புகளும், சீரியல் வாய்ப்புகளும் கிடைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் பாவனிக்கு பெரிதாக எந்த வாய்ப்பும் கிடைக்க வில்லை.

ADVERTISEMENT

இந்நிலையில், தற்போது பாவனி ஒரு படப்பிடிப்பு தளத்தின் மேக்கப் அறையில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் ஒரு புதிய தொடரில் பாவனி கமிட் ஆகிவிட்டார் என்று கமெண்ட்டில் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் சீசன் 2 விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

அந்த சீரியலின் சீசன் 2- வில் தான் பாவனி நடிக்கிறார் என்றும் சில தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

தற்போது பாவனியின் இந்த புதிய புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திக் ராஜா

2028 ஒலிம்பிக் திருவிழாவில் ‘கிரிக்கெட்’: வெளியான சூப்பர் தகவல்!

கன்வின்ஸ் செய்த பிக்பாஸ்: உறுதியாக இருந்த பவா

பாலின ரீதியில் தாக்குதல்: புதுச்சேரி பெண் அமைச்சர் ராஜினாமா!

Photo of author
christopher
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share