பசுபதியின் குற்றம் புரிந்தவன்!

Published On:

| By Minnambalam Desk

Pasupathy

எப்போதும் தனக்கு நடிக்கக் கிடைக்கும் கேரக்டர்களை மிக அசால்ட்டாக சிறப்பாக செய்யும் நடிகர் பசுபதி. எனினும் அவர் நடிக்கும் படங்கள் குறைவாகவே வரும்.

ஆனால் பைசன் காள மாடன் படத்தில் பலரும் உடலை வருத்திக் கொண்டு வாங்கிய பெயரை ஆழமான நடிப்பின் மூலமே சாதித்திருந்தார் பசுபதி.

இப்போது குற்றம் புரிந்தவன் என்ற வெப் சீரிஸில் நாயகனாக நடித்துள்ளார் பசுபதி. கூடவே நல்ல நடிகர் விதார்த்தும் உடன் நடிக்கிறார்.

“குற்ற உணர்விற்கும் அப்பாவித்தனத்திற்கும் இடையே உள்ள வித்தியாசங்களை புரிந்து கொள்ள முடியாமல் தவிக்க கூடிய ஒரு உளவியல் பயணம் இது.

ADVERTISEMENT

இந்த வன சீரிஸ் உங்களிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறது: நம்பிக்கைக்கும் சட்டத்திற்கும் நடுவே சிக்கும் போது ஒருவர் எவ்வளவு தூரம் செல்ல தயாராக இருப்பார்? நல்ல நோக்கில் செய்த செயல்களே எதிர்பாராத ஆபத்தான விளைவுகளை உண்டாக்க, மறைக்கப்பட்ட மர்மங்கள் வெளிப்படத் தொடங்கினால் எப்படி இருக்கும் என்பதே இதன் கதை.

ஒவ்வொரு மறைக்கப்பட்ட உண்மையும் வெளிவரத் தொடங்கும் போது,, உளவியல் ரீதியாக விடுபடுவதற்கும் மற்றும் குற்ற உணர்ச்சிக்கும் இடையே நடக்கும் நுண்ணிய போராட்டம் வெளிப்படும். லட்சுமி பிரியா சந்திரமௌலி துயரத்தில் உடைந்த தாயாகவும், விதார்த் உறுதியான காவலராகவும் நடித்துள்ளனர். “என்கிறார் இயக்குனர் செல்வமணி.

ADVERTISEMENT

டிசம்பர் 5 முதல், Sony LIV-ல் காணக் கிடைக்கும் தொடர் இது.

தொடரட்டும் பசுபதியின் நல்ல நடிப்பு…

  • ராஜ திருமகன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share