அரசு பேருந்தில் ஏசி இயங்கவில்லை என்று வழக்கு தொடர்ந்த பயணிக்கு ரூ.35 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க நெல்லை நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. Passenger gets Rs 35000 compensation
2024ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி மதுரையில் இருந்து நெல்லைக்கு ராஜேஷ் என்ற பயணி அரசு ஏசி பேருந்தில் பயணித்தார். அந்த பேருந்தில் ஏசி வேலை செய்யாததால் பயணிகள் அவதியடைந்தனர்.
இதுதொடர்பாக ராஜேஷ் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ராஜேஷ் நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை இன்று நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் விசாரித்தது. அப்போது பேருந்தில் ஏசி இயங்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதால் மனுதாராருக்கு நஷ்ட ஈடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ராஜேஷுக்கு நஷ்ட ஈடாக ரூ.25,000, வழக்குச் செலவு ரூ.10,000 என மொத்தம் ரூ.35,000-ஐ ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும்.
இந்த தொகையை நெல்லை மண்டல போக்குவரத்துக் கழக பொது மேலாளர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆகியோர் தங்களது சொந்தப் பணத்தினை கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. Passenger gets Rs 35000 compensation