டெல்லியில் 20 பள்ளிகளுக்கும், பெங்களூருவில் 40 பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Bomb threats to 60 schools in one day
கடந்த சில நாட்களாக தமிழகம் உட்பட நாடு முழுவதும் பள்ளிகள், விமான நிலையங்கள், வங்கிகள், அரசியல் கட்சித் தலைவர்களின் வீடுகள் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் இன்று ஒரே நாளில் டெல்லியில் 20 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி சிவில் லைன்ஸில் உள்ள செயிண்ட் சேவியர்ஸ், பஸ்சிம் விகாரில் உள்ள ரிச்மண்ட் குளோபல் பள்ளி, ரோஹினியில் உள்ள அபினவ் பப்ளிக் பள்ளி மற்றும் தி சவரன் பள்ளி உள்ளிட்ட 20 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு படை, மோப்ப நாய் மற்றும் தீயணைப்புத் துறை குழுவினர் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விரைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
வெடிகுண்டு மிரட்டல் குறித்த தகவல்கள் வெளியானதும் தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்ல பெற்றோர் பள்ளிகளின் முன் திரண்டனர்.
இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை ஒழுங்குபடுத்தி மாணவர்களை பெற்றோருடன் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
டெல்லியில் கடந்த 14, 15 மற்றும் 16 தேதிகளில் 11 பள்ளிகளுக்கும் ஒரு கல்லூரிக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இதுபோன்று, வெடிகுண்டு மிரட்டல் அனுப்பிய மின்னஞ்சல் முகவரியை கைப்பற்றிய காவல்துறையினர் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மர்ம நபரை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெங்களூரு பள்ளிகளுக்கும் மிரட்டல்
இந்நிலையில் பெங்களூருவில் உள்ள 40 தனியார் பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இந்த மிரட்டலை தொடர்ந்து பள்ளிகளில் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். Bomb threats to 60 schools in one
