கரூர்- திருச்சி ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திருச்சியில் இருந்து பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (Palakkad Express) இன்று ஜூலை 27, நாளை ஜூலை 28 ஆகிய 2 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது.
திருச்சியில் இருந்து பகல் 1 மணிக்கு வண்டி எண் 16843 பாலக்காடு எக்ஸ்பிரஸ் புறப்படும். ஆனால் கரூர்- திருச்சி ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த எக்ஸ்பிரஸ் ரயில் குளித்தலை- பாலக்காடு இடையே மட்டும் இயக்கப்படும்.
அதேபோல பாலக்காடு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் 16844 எக்ஸ்பிரஸ் ரயில் ஜூலை 27,28 ஆகிய 2 நாட்களுக்கு குளித்தலை வரை மட்டுமே இயக்கப்படும்.
சிறப்பு ரயில்: ஜூலை 27, ஆகஸ்ட் 1, ஆகஸ்ட் 6 ஆகிய நாட்களில் வாஸ்கோடகாமாவில் இருந்து சேலம் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.