’கன்பார்ம்’ ஆன படைத்தலைவன் ரிலீஸ் தேதி!

Published On:

| By christopher

padai thalaivan release date confirmed

மூன்று முறை ரிலீஸ் தள்ளிப்போன நிலையில், தற்போது வரும் ஜூன் 13ஆம் தேதி படைத்தலைவன் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. padai thalaivan release date confirmed

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’படை தலைவன்’.

வால்டர், ரேக்ளா படத்தை இயக்கிய அன்பு இயக்கியிருக்கும் இப்படத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

இத்திரைப்படம் முதலில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகும் என அறிவிப்பு வெளியானது. அதன்பின்னர் இந்தாண்டு பொங்கல் வெளியீடாக ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த மே 23ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

எனினும் திரையரங்குகளில் ஒதுக்கீட்டு சிக்கல்களின் காரணமாக, மூன்று முறையும் படத்தின் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் படைத்தலைவன் திரைப்படம் வரும் ஜூன் 13 ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம், தமிழகமெங்கும் 500 திரையரங்கில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share