திமுகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்ட நிலையில் சென்னையில் இன்று இரவு நடைபெறும் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் கூட்டத்துக்குப் போவதா? இல்லையா? என்பதில் மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தயக்கத்துடன் வீட்டில் காத்திருந்தார்.
இதனையடுத்து, இரவு 7 மணியளவில், “தற்போதைய நிலை வரை திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் இருக்கிறது.. அதனால் ஸ்டாலின் பிறந்த நாள் கூட்டத்தில் பங்கேற்போம்” என முடிவு செய்து ப.சிதம்பரம் கிளம்பினார்.
சென்னை கிழக்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் அமைச்சர் சேகர்பாபு இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
