28? 30? தொடரும் திமுக- காங்கிரஸ் இழுபறி!

By Mathi

|

Published on 4 Mar 2026, 5:39 PM

Stalin Rahul Gandhi

திமுக கூட்டணியில் தங்களுக்கு 30 தொகுதிகள்தான் வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக இருக்கிறது.

காங்கிரஸுக்கு 28 தொகுதிகள், 1 ராஜ்யசபா சீட் என பைனல் செய்து நேற்று இரவு ப.சிதம்பரத்திடம் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதனையே ப.சிதம்பரமும் டெல்லிக்கு தெரிவித்தார்.

ADVERTISEMENT

இதனையடுத்து இன்று இறுதி கட்டப் பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் குழு வரும் என திமுக காத்திருக்கிறது. இதுவரை காங்கிரஸ் குழு பேச்சுவார்த்தைக்கு வரவில்லை.

இது பற்றி விசாரித்த போது, ”திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 30 தொகுதிகள்தான் வேண்டும் என்பதில் ராகுல் காந்தி உறுதியாக இருக்கிறார். ஆனால் ஸ்டாலின் 28 தொகுதிகள்தான் தர முடியும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதனால் பேச்சுவார்த்தையில் மீண்டும் இழுபறி ஏற்பட்டுள்ளது” என்கின்றனர்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel