தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலாளர்களின் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை உள்ளாட்சித் துறை இன்று (அக்டோபர் 10) வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் உள்ள ஊராட்சி செயலாளர்கள் ஊராட்சிகளின் முழு நிர்வகப்பணிகளை கவனித்து வருகின்றனர்.
ஆனால் மாநிலம் முழுவதும் போதிய ஊராட்சி செயலாளர்கள் இல்லாததால், மத்திய, மாநில முழுவதும் அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதிலும், உறுப்பினர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதிலும் பெரும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து புகார்களும் பல்வேறு தரப்பில் குவிந்தன.
இந்த நிலையில் தான் தான் காலியாக உள்ள 1,450 காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், இப்பணிக்கு www.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக மட்டும் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து அந்தந்த மாவட்ட அளவில், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, தகுதிகள், வயதுவரம்பு ஆகியவற்றுடன் கூடிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்று (10ம் தேதி) முதல் நவம்பர் 9ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.