தமிழ்நாடு பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். OPS separate party registration! When did this happen?
ஆனால் எடப்பாடி பழனிசாமியோ தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இருக்கும் பட்சத்தில் அவர்கள் யாரும் இருக்கக்கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளார்.
இந்த நிலையில் எடப்பாடியின் அழுத்தத்தை அமித்ஷா ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் ஓபிஎஸ் சின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்ற கேள்வி எழுகிறது.
இதைத் தொடர்பாக ஓபிஎஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது…
“எம்ஜிஆர் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தொடர்ந்து பன்னீர் செல்வத்துக்கு ஆலோசனைகளை அளித்து வருகிறார்.
அவர் 2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பன்னீர்செல்வத்திடம், ‘எப்போதுமே டெல்லியை நம்பிக் கொண்டிருக்கக் கூடாது. அவர்கள் தங்களுக்கு என்ன லாபம் என்று மட்டும் தான் பார்ப்பார்கள். இப்போது நமக்கென்று தனியாக ஒரு கட்சி இல்லாத நிலையில் நாம் டெல்லியிடம் மிகுந்த எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.
எனவே தேர்தல் ஆணையத்திடம் ஒரு புதிய கட்சியை பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை அளித்து வையுங்கள்… அது எப்போதும் நமக்கு உதவும்’ என்று கூறியிருக்கிறார்.

பண்ருட்டி ராமச்சந்திரனின் இந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்ட ஓ.பன்னீர் செல்வம், அதன்படியே காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதி ராமன் என்ற தனது ஆதரவாளர் மூலமாக தேர்தல் ஆணையத்தில் எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்கிற கட்சியின் பெயரை பதிவு செய்யக்கோரி விண்ணப்பம் அளித்துள்ளார். OPS separate party registration! When did this happen?
கடந்த டிசம்பரில் அளித்த இந்த விண்ணப்பத்துக்கு 2025 ஜனவரி மாதம் தேர்தல் ஆணையமும் ஒப்புதல் (aknowledge) அளித்துள்ளது.
எடப்பாடியின் அழுத்தத்தால் ஒருவேளை தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் இல்லாமல் போனால் ஓ. பன்னீர்செல்வம் இந்த தனி கட்சியை வைத்துக்கொண்டு 2026 சட்டமன்ற தேர்தலில் களமிறங்குவார். அவர் விஜய்யோடு போனாலும் ஆச்சரியம் இல்லை” என்கிறார்கள்.