அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை எதுவும் நடக்கலாம் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் அண்ணாவின் 117வது பிறந்தநாளையொட்டி இன்று (செப்டம்பர் 15) சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு அருகில் உள்ள புகைப்படத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மாலையிட்டு மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது,பிரிந்துள்ள அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும். மக்கள் மன நிலையை உணர்ந்து அதன்படி செயல்பட உறுதி ஏற்க வேண்டும். இந்த இயக்கத்தை தொடங்கி எம்ஜிஆர் உருவாக்கி தந்த சட்ட விதிகள் இன்று பின்பற்றப்படவில்லை. அந்த விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன என்று குற்றம் சாட்டியவர் இதுகுறித்து நீதிமன்றத்தில் 6 வழக்குகள் உள்ளது என சுட்டிக்காட்டினார்.
அதிமுகவில் தலைவர்கள் இணையவில்லை என்றால் தொண்டர்கள் இணைந்து கட்சியை காப்பாற்றுவார்கள். நானும் செங்கோட்டையனும் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறோம்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நகேந்திரன் என்னுடன் பேசினார். நேரம் கிடைத்தால் சந்திப்பேன்.
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை எதுவும் நடக்கலாம் என தெரிவித்துள்ளார்.