மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து ‘நம்பிக்கை இல்லா தீர்மானம்’ கொண்டுவர முடிவு செய்துள்ளன.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேசவிடாமல் பாஜகவினர் தடுத்தனர். மேலும் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், பிரதமர் உரை இல்லாமலேயே குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த சபாநாயகர் ஓம் பிர்லா, “மக்களவையில் பிரதமர் மோடி பேசும் போது பெண் எம்.பிக்களை கேடயமாக வைத்து அவரை தாக்க சதித் திட்டம் தீட்டப்பட்டதாக” திடுக்கிடும் குற்றச்சாட்டை தெரிவித்தார்.
இதனிடையே மக்களவையில் அமளியில் ஈடுபட்டதாக இந்தியா கூட்டணியின் 8 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த 8 எம்.பிக்களும் நாடாளுமன்ற வளாகத்தில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை நடைபெற்ற ‘இந்தியா கூட்டணி’ கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
