ADVERTISEMENT

ஆபரேஷன் சிந்தூர்… பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம்களை தகர்த்தெறிந்த இந்தியா

Published On:

| By Selvam

operation sindoor terror sites

காஷ்மீர் பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம்களில் இந்தியா இன்று (மே 7) நள்ளிரவு 1.44 மணியளவில் தாக்குதல் நடத்தியுள்ளது. operation sindoor terror sites

கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி காஷ்மீர் பகல்ஹாமில் 26 இந்தியர்கள் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுப்பதற்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வந்தனர்.

ADVERTISEMENT

இன்று நாடு முழுவதும் 244 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடைபெற உள்ளது. இந்தநிலையில், இன்று நள்ளிரவு 1.44 மணியளவில் பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா (LeT), ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்புகளின் 9 இடங்களை இந்திய ராணுவத்தினர் குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.

இதனையடுத்து காஷ்மீர் பூஞ்ச் ​​மற்றும் ரஜோரியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் உள்ள கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் கடுமையான மோட்டார் ஷெல் தாக்குதல்களை நடத்தியது. பாகிஸ்தான் மீது இந்தியா போர் தாக்குதல் நடத்தியிருப்பது உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. operation sindoor terror sites

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share