வருது..வருது.. வங்க கடலில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள்- தமிழகத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை!

Published On:

| By Pandeeswari Gurusamy

2 low pressure areas in the Bay of Bengal

வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. செப்டம்பர் 23 ம் தேதி வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. மேலும் செப்டம்பர் 26ம் தேதி வங்கக்கடல் பகுதியில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் தமிழகத்தில் செப்டம்பர் 19,21 ஆகிய 2 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 7 முதல் 11 செ.மீ வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் 2 நாட்களுக்கு மஞ்சள் அலார்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையல் இன்று பிற்பகல் ஒரு மணி வரை சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, ஆகிய மாவட்டங்களில் இன்று பகல் 1 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் மயிலாடுதுறை, நாகை, கன்னியாகுமரி திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share