ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து மக்களவைவில் பாதிகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (ஜூலை 28) விளக்கமளித்தார்.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ என்ற குறியீட்டு பெயரில் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியது. இந்த போரை அமெரிக்கா தலையிட்டு நிறுத்தியதாக அதிபர் டொனால்டு டிரம்ப் பலமுறை கூறினார்.

இந்தநிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள், ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க கேட்டு தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தசூழலில் இன்று (ஜூலை 18) பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘இந்த அவை ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க தயாராக இருக்கிறது.
இந்திய ராணுவம் வரலாறு புத்தகத்தில்இடம் பெறத்தக்க வகையில் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா ஒரு தீர்க்கமான முடிவை எடுத்தது.
நமது ராணுவம் மிகவும் நுணுக்கமான திட்டமிடலுடன் நடத்திய தாக்குதலில் 9 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் லக்ஷர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது போன்ற தீவிரவாத அமைப்புகளில் தீவிரவாதத்துக்கு பயிற்சி அளித்தவர்கள், நிதி அளித்தவர்கள் என 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
7 மே 2025, இரவு 1:05 மணிக்கு, இந்தியாவின் சிறப்புப் படைகள் “ஆபரேஷன் சிந்தூரை”த் தொடங்கின. பாகிஸ்தன் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன.
பாகிஸ்தான் ஏவுகணைகள், ட்ரோன்கள், ராக்கெட்டுகள் மற்றும் பிற ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்தியா மீது பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியது. ஆனால் நமது எஸ் 400 ஆகாஸ் வான் ஏவுகணை பாகிஸ்தானின் ஆயுதங்களை தவிடுபொடியாக்கியது.
ஆப்ரேஷன் சிந்தூரின் போது இந்தாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
மே 10ஆம் தேதி பாகிஸ்தானின் பல விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது பாகிஸ்தான் தோல்வியை ஒப்புக்கொண்டது. இதனால் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை இடை நிறுத்தப்படுகிறது என்ற எச்சரிக்கையுடன் நிறுத்தப்பட்டது. மீண்டும் பாகிஸ்தான் ஏதேனும் தவறு செய்தால் இந்நடவடிக்கை தொடரும்.
அப்ரேஷன் சிந்தூர் என்பது ஒரு பிரதேசத்தை கைப்பற்றவோ அல்லது போரை தூண்டுவதர்காகவோ நடத்தப்பட்டது அல்ல. மாறாக தீவிரவாத தாக்குதலில் உயிரிழதவர்கள் குடும்பத்திற்கு நீதி கிடைக்கவும், பாகிஸ்தானை தளமாக கொண்ட தீவிரவாத உள் கட்டமைப்பை அழிக்கவும்தான் தொடங்கப்பட்டது.
எங்களின் ராணுவ நோக்கத்தை அடைந்ததால் போரை நிறுத்தினோம். எந்த ஒரு அழுத்தத்தாலும் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இடைநிறுத்தவில்லை. அழுத்தம் காரணமாக இடை நிறுத்தப்பட்டது என்று கூறுவது முற்றிலும் தவறானது” என்று கூறினார்.
தொடர்ந்து அவர், “நமது விமானங்கள் எத்தனை சுட்டு வீழ்த்தப்பட்டது என்று எதிர்க்கட்சிகள் கேட்கிறார்கள். இந்த கேள்வி நமது தேசிய உணர்வை போதுமான அளவு பிரதிபலிக்கவில்லை என்பதையே காட்டுகிறது. அவர்கள் எத்தனை பாகிஸ்தான் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று தான் கேட்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி, கவுரவ் கோகாய், ”ராஜ்நாத் சிங் நிறைய தகவல்களை சொன்னார், ஆனால் ஒரு பாதுகாப்பு அமைச்சராக, பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் பஹல்காமை அடைந்து 26 பேரைக் கொன்றது எப்படி என்று அவர் சொல்லவே இல்லை. தேச நலனுக்காக இந்தக் கேள்விகளைக் கேட்பது நமது கடமை” என்று குறிப்பிட்டார்.
இந்த விவாதத்தின் போது, 2008ல் நடந்த மும்பை தாக்குதலை ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டி பேசினார். இந்த தாக்குதலுக்கு உலக நாடுகளே கண்டனம் தெரிவித்த போதும் அப்போதிருந்த யுபிஏ அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.