ADVERTISEMENT

1200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச் சாவடி- தேர்தல் ஆணையம் கறார்- திமுக, அதிமுக பிஸி

Published On:

| By vanangamudi

Election Commission

தேர்தல் ஆணையமானது ஒரு வாக்குச் சாவடியில் 1200 வாக்காளர்கள் மட்டுமே இடம் பெற வேண்டும் என்ற புதிய நடைமுறையை நாடு முழுவதும் செயல்படுத்துகிறது. இதனால் ஏற்கனவே நியமிக்கப்பட்ட பாக முகவர்களுடன் புதிய பாக முகவர்களை நியமித்து தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கும் பணிகளில் திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

நாடு முழுவதும் வாக்குச் சாவடிகளில் இடம் பெற்றிருந்த வாக்காளர் எண்ணிக்கை சீரற்றதாக இருந்தது. ஒரு வாக்குச் சாவடியில் 1500க்கும் அதிகமான வாக்காளர்கள் இடம் பெற்றிருக்கும் போது, நீண்ட வரிசைகளில் காத்திருந்து வாக்களிக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது; வாக்குப் பதிவும் இத்தகைய வாக்கு சாவடிகளில் தாமதமானது. வாக்குப் பதிவு தாமதம், நீண்ட வரிசைகளில் வாக்காளர்கள் காத்திருப்பால் மொத்த வாக்குப் பதிவு சதவீதம் எவ்வளவு என்பதை அறிவிப்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்த குழப்பம்தான் தற்போது, வாக்கு திருட்டு விவகாரமாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. வாக்குப் பதிவு நாளில் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் வாக்கு சதவீதத்துக்கும் வாக்குப் பதிவுக்கு 2 நாட்கள் கழித்து தேர்தல் ஆணையம் அறிவிக்கும் வாக்கு பதிவுக்கும் மிகப் பெரிய வேறுபாடு இருந்து வருகிறது; தேர்தல் ஆணையமோ, காத்திருந்து வாக்களித்தவர்கள் எண்ணிக்கை என்கிறது; எதிர்க்கட்சிகளோ, போலி வாக்காளர்கள் மூலம் நடந்த வாக்கு திருட்டுதான் வாக்கு பதிவு வித்தியாசத்துக்கு காரணம் என்கின்றன.

இதனையடுத்தே வாக்குச் சாவடிகளில் நீண்ட வரிசைகளில் காத்திருபதைத் தவிர்க்கும் வகையில் ஒரு வாக்குச் சாவடியில் அதிகபட்சமாக 1200 வாக்காளர்கள் மட்டுமே இருக்க வேண்டும்; 1200-க்கும் மேல் வாக்காளர்கள் இருந்தால் 2 வாக்குச் சாவடிகளாக பிரிக்க வேண்டும் என்ற நடைமுறையை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ADVERTISEMENT

பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் அம்மாநிலத்தில் அனைத்து வாக்குச் சாவடிகளிலுமே 1200-க்கும் குறைவான வாக்காளர்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. நாட்டிலேயே முதல் மாநிலமாக பீகார் இதனை செயல்படுத்திவிட்டது.

அண்மையில் தமிழ்நாட்டுக்கும் இதேபோன்ற அறிவுறுத்தலை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியது. இதன்படி 1200க்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்ட வாக்கு சாவடிகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு வருகின்றன. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 28 முதல் 30 வாக்குச் சாவடிகளில் புதியதாக உருவாக்கப்படுகின்றன. ஏற்கனவே பூத் முகவர்களை அரசியல் கட்சிகள் தயாரித்த நிலையில் அவர்களுடன் இந்த புதிய வாக்குச் சாவடி முகவர்களின் பட்டியலையும் சேர்த்து தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கும் பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share