மதுரையில் நடைபெற்ற தவெக 2-வது மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், மதுரை பற்றி குறிப்பிடுகையில்,
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் குறித்து பேசினார். அப்போது விஜயகாந்தை என் அண்ணன் என்றார் விஜய்.
இதனை விமர்சித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய்காந்த் அரசியல் கட்சியை தொடங்கிய போது, அவர் உடல்நலன் பாதிக்கப்பட்டிருந்த போது இந்த தம்பி விஜய் எங்கே இருந்தார்? என கேள்வி கேட்டிருந்தார்.
இது பற்றி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், விஜயகாந்தை அண்ணன் என்கிறார் விஜய்.. நாங்கள் அவரை தம்பி என்கிறோம்.. விஜய் அப்படி பேசியதற்காக, தவெகவுடன் கூட்டணி என்பது எல்லாம் அர்த்தம் கிடையாது.
தேமுதிக யாருடன் கூட்டணி என்பது குறித்து ஜனவரி 9-ந் தேதி மாநாட்டில்தான் அறிவிப்போம். அண்ணா, எம்ஜிஆர் பற்றி விஜய் இதுவரை ஏன் பேசவில்லை என்பதை அவரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்.
விஜயகாந்த் உடல்நலன் சரியில்லாத போது அவரை அண்ணன் என்று சொல்லாதவர் இப்போ ஏன் அப்படி பேசுகிறார் என சகோதரர் சீமான் கேள்வி கேட்கிறார்.. அவரது கேள்வி சரியானதுதான் என்றார் பிரேமலதா.
