சார்ஜா, துபாய் ஆகிய இடங்களில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களிடம் தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் சார்ஜாவில் 10 கனரக பேருந்து ஓட்டுனர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. OMCL Recruitment 2025
இதற்கு ஊதியம் 58,000 – 60,000 ரூபாய் வரை வழங்கப்படும். 30 – 40 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். துபாய் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். OMCL Recruitment 2025
ஸ்டீல் ஸ்ட்ரக்சுரல் ஃபேப்ரிகேட்டர் பணிக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 15 பணியிடங்கள் உள்ளது. 50,000 – 55,000 ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படும். 28 – 40 வயதுடைய ஆண்கள் விண்ணப்பிக்கலாம். ITI/NAC படித்திருக்க வேண்டும்.
சார்ஜாவில் Split Ac + Window AC + Central AC Technician,Store Keeper ஆகிய பணியிடங்களுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 5 காலியிடங்கள் உள்ளன. 34,000 – 35,000 ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படும். 25 – 35 வயதுடைய ஆண்கள் விண்ணப்பிக்கலாம். 10ஆம் வகுப்பு தேர்ச்சி அவசியம்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி மே 1.
இப்பணிகளுக்கான நேர்காணலுக்கு மே 3, 4 ஆகிய தேதிகளில் காலை 9 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள (பேருந்து நிலையம் அருகில்) ஒருங்கிணைந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்துக்கு அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேரில் வர வேண்டும். கூடுதல் விவரங்களை www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
ஆல் தி பெஸ்ட்