6 ஆண்டுகளுக்கு பின் காஞ்சி சங்கர மட இளைய மடாதிபதி தேர்வு! 

Published On:

| By Kavi

Kanchi Sankara Matham elects younger madadhipadhi

காஞ்சி சங்கர மடத்தின் 71-வது இளைய மடாதிபதியாக ஸ்ரீ கணேச சர்மா டிராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். Kanchi Sankara Matham elects younger madadhipadhi

காஞ்சி சங்கர மடத்தை ஆதிசங்கரர் நிறுவினார். இந்த மடத்தின் 69ஆவது மடாதிபதியாக இருந்த ஜெயேந்திரர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2018ஆம் ஆண்டு காலமானார்.  ஜெயேந்திரர் இறந்ததையடுத்து இளைய மடாதிபதியாக இருந்த விஜயேந்திரர் சங்கரமடத்தின் 70ஆவது மடாதிபதியாக பதவி ஏற்றார். 

ADVERTISEMENT

அதன் பின்னர் இளைய மடாதிபதி தேர்வு கடந்த 6 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது.

இந்தநிலையில் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளையமடாதிபதியாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கணேச சர்மா டிராவிட் அறிவிக்கப்பட்டுள்ளார். Kanchi Sankara Matham elects younger madadhipadhi

ADVERTISEMENT

இதுகுறித்த அறிவிப்பை இன்று (ஏப்ரல் 25) விஜயேந்திர சரஸ்வதி சுவாமி வெளியிட்டுள்ளார். 

அதில், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் காஞ்சிபுரத்தில் அட்சய திருதியை நாளில் (ஏப்ரல் 30, 2025) ஸ்ரீ துட்டு சத்ய வெங்கட சூர்ய சுப்ரமணிய கணேச சர்மா திராவிட்-டுக்கு சன்யாச தீக்‌ஷை வழங்குகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

ஸ்ரீ கணேச சர்மா டிராவிட் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்.  ஆனால் இவரது பூர்வீகம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள வலங்கைமான் ஊராட்சியாகும். 

இவர், ரிக் வேதத்துடன் யஜுர் வேதம், சாம வேதம், ஷடங்கங்கள், தஷோபநிஷாத்ரிகங்கள் மற்றும் தஷோபநிஷாத்ரிகப் படிப்புகளை முடித்துள்ளார் என்று சங்கர மடம் தெரிவித்துள்ளது. Kanchi Sankara Matham elects younger madadhipadhi

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share