சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை இன்று (அக்டோபர் 3) சவரனுக்கு ரூ.880 வரை குறைந்துள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, போர் பதற்றங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் தங்கம் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 வரை குறைந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் இன்று (அக்டோபர் 3) ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.110 குறைந்து ரூ.10,840 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.880 வரை குறைந்து ரூ.86,720 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று (அக்டோபர் 3) ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.3 குறைந்து ரூ.161 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,61,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்யை தங்கம் விலை நிலவரம்
சென்னையில் நேற்று மாலை (அக்டோபர் 2) 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10.950-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.87,600-க்கும் விற்பனையானது.