ADVERTISEMENT

தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் ’அக்டோபர் 21’ அரசு விடுமுறை!

Published On:

| By christopher

'October 21' is a government holiday in Puducherry too!

தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அக்டோபர் 21 அன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வரும் 20ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மாணவர்கள், ஆசிரியர்கள், அரசுஅலுவலர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோர் அவர்களது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்புவர்.

ADVERTISEMENT

அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தீபாவளிக்கு மறுநாள் செவ்வாய்கிழமை 21.10.2025 அன்று ஒரு நாள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அரசு விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு நேற்று இரவு உத்தரவிட்டது.

இந்த நிலையில் புதுச்சேரியிலும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அக்டோபர் 21 அன்று அரசு விடுமுறை அறிவித்து முதல்வர் ரங்கசாமி இன்று உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share