கோவிலில் ஆபாச நடனம்: 3 அர்ச்சகர்கள் மீது போலீஸ் வழக்கு பதிவு!

Published On:

| By Minnambalam Desk

Temple Dance

ஶ்ரீவில்லிப்புத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் உள்ள ஒரு அறையில் மது போதையில் ஆபாச நடனமாடிய 3 அர்ச்சகர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். Temple Obscene Dance Priests
ஶ்ரீவில்லிப்புத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் அர்ச்சகர்களின் ஆபாச நடனம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில், பெண் பக்தர் ஒருவர் முகத்தில் விபூதியை அள்ளி வீசி அர்ச்சகர்கள் ஆட்டம் போட்ட காட்சியும் இடம் பெற்றிருந்தது.

இது தொடர்பாக வழக்கறிஞர் பாண்டியராஜன் போலீசில் புகார் கொடுத்தார். மேலும் அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதனையடுத்து கோவிலில் ஆபாச நடனமாடிய கணேசன், வினோத், கோமதிநாயகம் ஆகிய 3 அர்ச்சகர்கள் மீதும் வீடியோ படம் எடுத்த சபரிநாதன் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஆபாச நடனமாடிய அர்ச்சகர்கள் மூவரும், பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்துக்காக பணிக்கு வந்த தற்காலிக அர்ச்சகர்கள் என்றும் இந்த மூவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share