ADVERTISEMENT

வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்

Published On:

| By Selvam

NTK Seeman Speech

மே 18-ஆம் தேதி கோவையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழின பேரெழுச்சி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் விடுதியில் ஏப்ரல் 18-ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. NTK Seeman Speech

இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய சீமான், “2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியில் நான் சொல்பவர்கள் தான் வேட்பாளர்கள். நான் சொல்வதற்கு மாறாக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால், விஜய் கட்சிக்கு சென்று விடுங்கள். நானே உங்களை சேர்த்து விடுகிறேன்.

ADVERTISEMENT

நாம் தமிழர் கட்சியில் இருந்து சென்றால் ஸ்டாலின், விஜய் ஆகியோர் தேர்தலில் நிற்க உடனடியாக சீட் கொடுத்துவிடுவார்கள்.

இந்தப் படையை சரியாக வழிநடத்திக் கொண்டுபோய் நான் வென்று காட்டுவேன் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டும் என்னுடன் வாருங்கள். உங்களுக்கு ஒதுக்கும் தொகுதியில் நீங்கள் வென்று காட்ட வேண்டும்.

ADVERTISEMENT

நீங்கள் வெற்றி பெற்றால் பல்லக்கில் ஏற்றி மாலை போட்டு அழைத்து வருவேன். தோற்றால் பாடையில் ஏற்றி மாலை போடுவேன். எப்படி பார்த்தாலும் மாலை கன்ஃபார்ம். தோற்றால் சிறிது பால்டாயிலை வாங்கி குடித்துவிட்டு நீங்களே பாடையில் படுத்துவிடுங்கள். வேறு வழியே கிடையாது.

நம்முடைய கட்சி பிளக்ஸ் பேனரில் தொண்டர்கள், நிர்வாகிகள் நல்ல புகைப்படங்களை வைக்க வேண்டும். தறுதலைகளை போல தலையை விதவிதமாக அலங்காரம் செய்து கொண்டு ஃபோட்டோ வைக்க கூடாது. எங்கெங்கு நிராகரிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு, வீழ்த்தப்பட்ட மக்கள் இருக்கிறார்களோ அங்கு நம்முடைய குரல் ஒலிக்க வேண்டும்” என்று தெரிவித்தார். NTK Seeman Speech

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share