2025ம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக பிரசித்தி பெற்ற நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல் வேதியியல், கலை இலக்கியம் உள்ளிட்ட பிரிவுகளில் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 8) உலோக கரிம கட்டமைப்புகளின் வளர்ச்சி மற்றும் கண்டுபிடிப்பிற்காக சுசுமு கிடகாவா, ரிச்சர்ட் ராப்சன், ஒமர் எம்.யாகி ஆகிய 3 பேருக்கு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்காவைச் சேர்ந்தவர்களுக்கு இந்த ஆண்டு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
சுசுமு கிடகவா ஜப்பானில் உள்ள க்யோடோ பல்கலைக்கழகத்திலும், ரிச்சர்ட் ராப்சன் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் பல்கலைக்கழகத்திலும், ஒமர் எம்.யாகி அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்திலும் பேராசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
நேற்று குவாண்டம் கணினிகளின் வளர்ச்சிக்கு வித்திட்ட கண்டுபிடிப்புகளுக்காக, 2025ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகளான ஜான் கிளார்க், மைக்கேல் டெவோரெட் மற்றும் ஜான் மார்ட்டினிஸ் ஆகியோர் இந்த பரிசை பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.