வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்ட தங்கம்.. ரூ.90,000த்தை கடந்தது

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold

சர்வதேச சந்தை விலை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கத்தின் விலை நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.90,000த்தை கடந்து விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் இன்று (அக்டோபர் 8) ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,300 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.800 உயர்ந்து ரூ.90,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய வெள்ளி விலை நிலவரம்

வெள்ளியின் விலையில் இன்று மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.167க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,67,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய தங்கம் விலை

சென்னையில் நேற்று (அக்டோபர் 7) ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.75 உயர்ந்து ரூ.11,200 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் தங்கம் ரூ.600 உயர்ந்து ரூ.89,600க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share