தலைநகரில் அதிரடி… பழைய வாகனங்களுக்கு இன்று முதல் பெட்ரோல், டீசல் நிரப்ப தடை!

Published On:

| By christopher

No petrol, Diesel for old vehicles in capital

டெல்லியில் சுமார் 62 லட்சம் பழைய வாகனங்களுக்கு இன்று (ஜூலை 1) முதல் பெட்ரோல், டீசல் வழங்கக் கூடாது என்ற உத்தரவு அமலுக்கு வந்தது. No petrol, Diesel for old vehicles in capital

தேசிய தலைநகரான டெல்லியில் காற்று மாசுபாடு என்பது கடந்த சில ஆண்டுகளாக படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என பலரும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இதற்கிடையே அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (CSE) 2024 நவம்பரில் வெளியிட்ட பகுப்பாய்வில், டெல்லியில் அதிக மாசு ஏற்படுத்தும் மூலங்களில் பாதிக்கும் மேற்பட்டவை வாகனங்கள் தான் (51 சதவீதம்) என தெரியவந்தது.

இதனையடுத்து ஆயுள் காலம் முடிந்து இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் இன்று முதல் பெட்ரோல் டீசல் வழங்கக்கூடாது என காற்று தர மேலாண்மை ஆணையம் (CAQM) உத்தரவிட்டது.

ADVERTISEMENT

அதன்படி டெல்லியில் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களும் இன்று முதல் எரிபொருள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களின் RC-ஐ சரிபார்த்த பின்னரே பெட்ரோல், டீசல் விற்பனை செய்யவும், பழைய வாகனங்களை இயக்கினால் அபராதம் விதிக்கவும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது.

ADVERTISEMENT

பழைய வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதைக் கண்காணித்து தடுக்க அடையாளம் காணப்பட்ட 350 பெட்ரோல் பங்க்-களிலும் ஒரு போக்குவரத்து காவல்துறை அதிகாரி மற்றும் இரண்டு கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட உள்ளனர்.

ஆயுள் காலம் முடிந்த வாகனங்கள் தானியங்கி எண் தகடு அங்கீகாரம் (ANPR) கேமராக்கள் மூலம் அடையாளம் காணப்படும். வாகன் தரவுத்தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட கேமராக்கள், எண் தகடுகளை சரிபார்த்து எரிபொருள் நிலைய ஆபரேட்டரை எச்சரிக்கும். அதன்மூலம் பழைய வாகனங்களை பறிமுதல் செய்வதற்கும் அகற்றுவதற்கும் இந்த வாகனம் அமலாக்க நிறுவனங்களுடன் பகிரப்படும்.

இந்த அதிரடி உத்தரவின் மூலம், டெல்லியில் மட்டும் சுமார் 62 லட்சம் பழைய வாகனங்களுக்கு (61,14,728) எரிபொருள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share