ஜீவனாம்சம் வேண்டாம்… பிரிவே போதும் : விவாகரத்து பெற்ற ஹன்சிகா

Published On:

| By Kavi

நடிகை ஹன்சிகா தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றுள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடிகை ஹன்சிகா மோத்வானிக்கும், தொழிலதிபர் சோஹைல் கதுரியாவுக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்தநிலையில் இருவரும் விவாகரத்து கேட்டு மும்பை பாந்த்ரா குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதில் ஹன்சிகா தரப்பில், திருமணத்திற்குப் பிறகு மிகக் குறுகிய காலமே ஒன்றாக வாழ்ந்தோம். அதற்குள்ளேயே, தங்களது உறவில் அடிப்படையான கருத்து வேறுபாடுகள் இருப்பதை உணர்ந்தேன். எந்த விதத்திலும் எங்கள் இருவருக்கும் ஒத்து வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. தனக்கு ஜீவனாம்சம் எதுவும் வேண்டாம் என்றும் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்தசூழலில் மும்பை நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கி இன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2024 முதல் இருவரும் தனி தனியாக வாழ்ந்து வந்த நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றுள்ளனர்.

ADVERTISEMENT

திருமணமாகி நான்கே ஆண்டுகளில் விவகாரத்து பெற்றுள்ளார் ஹன்சிகா.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share