சென்னை அருகே எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் வட மாநில தொழிலாளர்கள்.
சென்னை அருகே எண்ணூர் அனல் மின்நிலையத்தில் ராட்சத வளைவு ஒன்றை அமைக்கும் கட்டுமான பணி நடைபெற்று வந்தது. இதற்காக 30 அடி உயரத்தில் சாரம் கட்டப்பட்ட போது எதிர்பாரத விதமாக அந்த சாரம் சரிந்து விழுந்தது. இதில் 9 தொழிலாளர்கள் கீழே விழுந்து பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எண்ணூர் அனல்மின் நிலையத்தில் நடந்த இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் வடமாநில தொழிலாளர்கள் என கூறப்படுகிறது.