ஆயுத பூஜை விடுமுறை : சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்!

Published On:

| By Kavi

ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து நாளை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. 

இந்த வாரம் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறை வருகிறது. 

ADVERTISEMENT

இதையொட்டி சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இதன் காரணமாக தமிழக அரசு சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 

கிளாம்பாக்கத்துக்கு செல்ல ஏதுவாக தாம்பரத்திலிருந்து இன்று இரவு இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. 

ADVERTISEMENT

இந்நிலையில் எழும்பூரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லவும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

எழும்பூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நாளை இரவு 10.15 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் பகல் 2.05 திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையம் சென்றடையும். 

ADVERTISEMENT

அதுபோல வரும் 5ம் தேதி திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்திலிருந்து 4.30 மணிக்கு கிளம்பும் ரயில் மறுநாள் எழும்பூர் வந்தடையும். 

பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி வழியாக இந்த ரயில் இயக்கப்படுகிறது. 

தாம்பரத்தில் இருந்து நாளை மாலை 4.15 மணிக்கு செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அந்த ரயில் மறுநாள் அதிகாலை 3 மணிக்கு சென்றடையும். திருச்சி. அரியலூர் வழியாக இயக்கப்படுகிறது. 

எழும்பூரில் இருந்து நாளை இரவு 11.45 மணிக்கு ஒரு மெமு ரயல் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மயிலாடுதுறை, சிதம்பரம் சீர்காழி, கும்பகோணம் வழியாக செல்லும் என்று தெற்கு ரயில்வே சார்பில் கூறப்பட்டுள்ளது

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share