தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்சி- NIA அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) சோதனை மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தின் செங்கல்பட்டில் அண்மையில் லஷ்கர் இ தொய்பா- பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த முகம்மது கைது செய்யப்பட்டார். பீகாரைச் சேர்ந்த முகம்மது- லஷ்கர் அமைப்பின் ஸ்லீப்பர் செல்லாக, கூலித் தொழிலாளி போல செங்கல்பட்டில் பதுங்கி இருந்த போது கைது செய்யப்பட்டார்.
தற்போது முகம்மதுவிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முகம்மது தந்த தகவல்களின் அடிப்படையில் தமிழ்நாட்டின் தூத்துக்குடி ஹவுசிங் காலனியில் உள்ள ஒரு வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த வீட்டில் தங்கி இருந்த பீகார் இளைஞரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதே நேரத்தில் பீகாரைச் சேர்ந்த அந்த இளைஞர் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவராக இருக்கக் கூடும் என கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் பீகார் மாநிலத்தில் கதியார் மாவட்டத்தில் இக்பால் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல ஜம்மு காஷ்மீர், உத்தரப்பிரதேசம், பீகார், கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
ஜம்மு காஷ்மீரில் 9 இடங்களிலும் பீகாரில் 8 இடங்களிலும் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.