சற்றே சரிந்த தங்கம் விலை நிலவரம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

gold and silver price on 8 september 25 in chennai

தங்கம் விலை சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப நாள்தோறும் ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 6) ஒரு சவரன் தங்கம் வரலாறு காணாத உச்சமாக ரூ.80,000த்தை கடந்து விற்பனை செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இன்று ஒரு சவரன் தங்கம் ரூ. 79,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய தங்கம் விலை

22 கேரட் ஆபரண தங்கம் விலை இன்று (செப்டம்பர் 8) ஒரு கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.9,970க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.280 குறைந்து ரூ.79,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய வெள்ளி விலை

ஒரு கிராம் வெள்ளி ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,40,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய தங்கம் விலை

ADVERTISEMENT

விடுமுறை நாள் என்பதால் நேற்று (செப்டம்பர் 7) தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. நேற்று முன் தினம் செப்டம்பர் 6 ஆம் தேதி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,005-க்கும், சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.80,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share