தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் இன்று (ஆகஸ்ட் 21) நடைபெற்று வருகிறது. இதனையொட்டி கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இலட்சக்கணக்கான தொண்டர்கள் இன்று காலை முதலே அங்கு குவிந்து வருகின்றனர்.
மங்கள இசையுடன் சரியாக 3.15 மணிக்கு மாநாடு தொடங்கியது. தொடர்ந்து விஜய் படத்தில் இடம்பெற்ற பிரபல பாடல்கள் ஒலிப்பரப்பட்டன.
அதனைத்தொடர்ந்து விஜய்யை வரவேற்கும் வகையில், ’எங்கள் உரிமையின் காவலன்… பெரியாரின் பேரேனே’ என்ற பாடல் இசைக்கப்பட்டது.
அப்போது மாநாட்டு மேடைக்குள் அடியெடுத்து வைத்த விஜய் அங்கிருந்த கட்சியின் தலைமை நிர்வாகிகள், அவரது பெற்றோர், மாவட்ட செயலாளர்கள் அனைவரையும் நேரில் சென்று கைகுலுக்கி வரவேற்றார்.
தொடர்ந்து வரவேற்பு பாடல் ஒலிக்க தொண்டர்களை நோக்கி வணக்கம் செலுத்தினார். விஜய் குரலில் இந்த பாடலை மாநாட்டு திடலில் இருந்த ரசிகர்கள் அனைவரும் ரசித்து கொண்டாடினர்.
அதில் “உங்கள் விஜய் உயிரென வர்றேன் நான். உங்கள் விஜய் எளியவன் தோழன் நான். மக்கள் தானே மன்னர்களே என்று வணங்கிக் காட்ட வர்றேன் நான்” போன்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.