வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், வடக்கு அந்தமான் கடலின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். தென் மாநிலங்களின் மேல் ஒரு வளிமண்டல ஒரு மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதனால் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இன்று இடி, மின்னலுடனான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.