மாறப்போகும் ராமேஸ்வரம்… தங்கம் தென்னரசு சூப்பர் அறிவிப்பு!

Published On:

| By Kavi

new airport will be built in Rameswaram

அதிக சுற்றுலா பயணிகள் வருகை தரும் ராமேஸ்வரத்துக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. new airport will be built in Rameswaram

தமிழகத்தில் விமான நிலையங்களை விரிவாக்கம் செய்வது தொடர்பான அறிவிப்பில்,

“சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் தூத்துக்குடி விமான நிலையங்களின் விரிவாக்கத்திற்கு உரிய நிலங்களைக் கையகப்படுத்தி, 2,938 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு  இந்த அரசு வழங்கியுள்ளது.

சேலம் விமான நிலையத்திற்கென 350 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. 

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் ஒன்று அமைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார் தங்கம் தென்னரசு. new airport will be built in Rameswaram

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share