நீட் தேர்வு மாணவர்கள் கவனத்துக்கு… என்.டி.ஏ முக்கிய அறிவிப்பு!

Published On:

| By Kavi

NEET PG Exam 2025 Postponed

ஜூன் 15ஆம் தேதி நடைபெறவிருந்த முதுகலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) அறிவித்துள்ளது. NEET PG Exam 2025 Postponed

வரும் ஜூன் 15ஆம் தேதி முதுகலை படிப்புகளுக்கான  நீட் தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. NEET PG Exam 2025 Postponed

ADVERTISEMENT

கடந்த ஆண்டு இரண்டு ஷிப்டுகளில் தேர்வு நடத்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் அதேபோன்று நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர் அதிதி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

ADVERTISEMENT

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒரே ஷிப்டில் தேர்வை நடத்துவதில் என்ன பிரச்சனை? என்று கேள்வி எழுப்பியது. 

இதற்கு தேசிய தேர்வு முகமை சார்பில், கணினி வசதி, வைஃபை உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய தேர்வு மையங்கள் நாட்டில் குறைவாக இருப்பதால் இரண்டு ஷிப்டுகளாக தேர்வு நடத்துவதாக வாதிட்டது. 

ADVERTISEMENT

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் ஒரே ஷிப்டில் தேர்வை நடத்த உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த நிலையில் தேசிய தேர்வு முகமை நேற்று (ஜூன் 2) வெளியிட்ட அறிவிப்பில், “ஜூன் 15ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த தேர்வுகள், ஒரே கட்டமாக நடத்தப்படவுள்ளது. 

இதற்கு கால அவகாசம் தேவை என்பதால் தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது. புதிய அட்டவணை விரைவில் வெளியிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share