திரிஷா குறித்த அநாகரிக பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் நயினார்

Published On:

| By Pandeeswari Gurusamy

திரிஷா குறித்த அநாகரீக பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் இன்று (பிப்ரவரி 16) பகிரங்கமாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நடந்த நடிகர் விஜய்யின் நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், விஜய் முதலில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும், திரிஷாவிடம் இருந்து வெளியே வர வேண்டும், என்று தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சித்திருந்தார். இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தன.

ADVERTISEMENT

இந்நிலையில், இன்று காலை மதுரையில் பேசிய நாகேந்திரன், இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “யாருடைய மனதும் புண்படக் கூடாது என்று நினைப்பவன்” என்று தெரிவித்திருந்தார்.

மீண்டும் இன்று பிற்பகளில் பிற்பகல் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய நாகேந்திரன், “அன்று தவறி வந்த வார்த்தை” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share