நாடு முழுவதும் நள்ளிரவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் உச்சகட்ட போர்ச் சூழல் நிலவி வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் உலகின் அதிமுக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டது ஈரான்.
ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டதால் அதன் வழியாக கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இந்தியா தற்போது ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது.
அதே நேரத்தில் சமையல் எரிவாயு கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு கூறி வருகிறது.
இந்நிலையில் நள்ளிரவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கிடுகிடுவென கடுமையாக உயர்ந்துள்ளது.
ரூ1929-க்கு விற்பனை செய்யப்பட்ட வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ114.50-க்கு உயர்ந்து ரூ.2,043.50-க்கு விற்பனையாகிறது.
வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.60 உயர்ந்து ரூ.928.50க்கு விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
