நருடோ மற்றும் ஒன் பீஸ் படங்களுக்குப் பின்னால் இருந்த ஜப்பானிய அனிமேஷன் துறையில் பிரபல அனிமேட்டரும் இயக்குநருமான ஷிகேகி அவாய் நேற்று இரவு (மார்ச் 19) காலமானார். அவருக்கு வயது 71. naruto animator shigeki awad died
உலகளவில் அனிமேஷன் துறையில் புகழ்பெற்றவராக வலம் வந்தவர் ஷிகேகி அவாய். இவர் ஷிகேனோரி அவாய் என்றும் அழைக்கப்பட்டார். 1980களில் அனிமேஷன் துறையில் நுழைந்த அவாய் அவாய், ஒன் பீஸ், நருடோ, அட்டாக் ஆன் டைட்டன் மற்றும் மை ஹீரோ அகாடமி ஆகியவற்றின் முக்கிய அனிமேட்டராக இருந்தார்.
மேலும் One Punch Man, Beyblade, Food War மற்றும் Tokyo Underground உட்பட அனிமேஷன் துறையில் சுமார் 200க்கும் அதிகமாக அத்தியாயங்களை இயக்கினார்.
கடந்த ஆண்டு கூட தி மிஸ்ஃபிட் ஆஃப் டெமன் கிங் அகாடமி சீசன் 2, உசுமாகி மற்றும் டெர்மினேட்டர் ஜீரோ போன்ற அனிம் எபிசோட் இயக்குநராகவும் அனிமேட்டராகவும் பணியாற்றினார்.
இந்த நிலையில் ஷிகேகி அவாய் நேற்று காலமானார். அவருக்கு ஹிடேகி மாட்சுவோகா மற்றும் சுடோமு ஓனோ உள்ளிட்ட கலைஞர்கள் அவாய்க்கு அஞ்சலி செலுத்தினர்.
மேலும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அவாய்யின் மறைவுக்கு உருக்கமுடன் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.